வெள்ளி, 30 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை 30th September 2022

சத்திய ஆராதனை
30th September 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119:17-24

கிமெல் 
+++++++
துதி ஆராதனை
+++++++++++++++
உமது அடியேனுக்கு அனுகூலமாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:17 
நான் தியானிக்கின்ற உமது பிரமாணங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:23
உமது கற்பனைகளை விட்டு விலகுகிறவர்களை கடிந்து கொள்ளுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:21

உமது கற்பனைகளை எனக்கு மறையாத தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:19 
நிந்தையை என்னை விட்டகற்றின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:22 
அவமானத்தை என்னை விட்டகற்றின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:22

உமது சாட்சிகளை கைக்கொள்ளச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:22 
என் ஆலோசனைக்காரருமாயிருக்கிற உம்முடைய சாட்சிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:24
எனக்கு இன்பமாயிருக்கிற உம்முடைய சாட்சிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:24

நன்றி ஆராதனை
++++++++++++++++
உமது வேதத்தை பார்க்கும்படி என் கண்களைத் திறந்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:18 
உமது வசனத்தை கைக்கொள்ளுகிற என்னை பிழைக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:17
என் ஆத்துமாவை உமது நியாயங்கள்மேல் எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:27

தொழுகை ஆராதனை
+++++++++++++++++++
வேதத்திலுள்ள உமது அதிசயங்களுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன் 
சங் 119:18
நான் பரதேசியாயிருக்கிற இந்த பூமிக்காக தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 119:19
உமது கற்பனைகளை விட்டு வழி விலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை கடிந்து கொள்ளுகிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் 
சங் 119:21
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக