சத்திய ஆராதனை
20th September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 116:6-12
துதி ஆராதனை
*******************
என் ஆத்துமாவை மரணத்திற்கு தப்புவித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 116:8
என் கண்ணைக் கண்ணீருக்கு தப்புவித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 116:8
என் காலை இடறுதலுக்குத் தப்புவித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 116:8
என்னை இரட்சித்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 116:6
மெலிந்துபோன என்னை காக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 116:6
என் ஆத்துமாவுக்கு நன்மை செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 116:7
உமக்கு முன்பாக என்னை நடக்கச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 116:9
என் ஆத்துமாவை இளைப்பாறுதலுக்குத் திரும்பச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 116:7
நன்றி ஆராதனை
**********************
என்னை விசுவாசிக்கச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 116:10
விசுவாசித்தபடியால் என்னை பேசச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 116:10
தொழுகை ஆராதனை
************************
எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 116:12
எந்த மனுஷனும் பொய்யன் என்று எனக்கு உணர்த்தின தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 116:11
ஜீவனுள்ளோர் தேசத்தில் என்னை நடக்கச் செய்த தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 116:9
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக