17th September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 115 :11-18
துதி ஆராதனை
+++++++++++++++
இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 115:12
ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 115:12
எங்களை வர்த்திக்கப் பண்ணுகிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 115:14
வானங்களை படைத்த நீர் எங்களை ஆசிர்வதித்தமைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 115:15
பூமியை படைத்த நீர் எங்களை ஆசீர்வதித்தமைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 115:15
எங்கள் பிள்ளைகளை வர்த்திக்கப் பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 115:14
கர்த்தருக்கு பயப்படுகிற பெரியோரை ஆசீர்வதிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 115:13
கர்த்தருக்கு பயப்படுகிற சிறியோரையும் ஆசீர்வதிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
115:13
மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் உம்மைத் துதியார்கள் என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 115 17
நன்றி ஆராதனை
++++++++++++++++
எங்களை நினைத்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 115:12
எங்களை ஆசிர்வதிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 115:12
உமக்கு பயப்படுகிறவர்களுக்கு துணையும் கேடகமுமாயிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 115:11
தொழுகை ஆராதனை
+++++++++++++++++++ உம்முடையவைகளாயிருக்கிற வானங்களுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 115:16
பூமியையோ மனுபுத்திரருக்கு கொடுத்த தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 115:16
இதுமுதல் என்றென்றைக்கும் உம்மை ஸ்தோத்திரித்து தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 115:18
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக