புதன், 7 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை 7th September 2022

சத்திய ஆராதனை
7th September 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 109 

துதி ஆராதனை
*******************
எனக்கு சகாயம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 109:26 
எனக்கு சகாயம் செய்யும் உமது கரத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 109:27 
தேவரீர் சகாயம் செய்தீர் என்று அவர்களை அறியச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 109:27

உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 109:21
உமது கிருபையின்படி என்னை இரட்சிக்கிற தேவனே உமது கோடான கோடி ஓசன்னா
சங் 109:26

ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவன் வலதுபாரிசத்தில் நிற்கும் தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சாங் 109:31

நான் துதிக்கும் கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 109:1 
மவுனமாயிராத கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 109:1
உமது அடியேனை மகிழச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 109:28

நன்றி ஆராதனை 
**********************
என் விரோதிகள் எழும்பினாலும் அவர்களை வெட்கப்பட்டு போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 109:28 
என் விரோதிகளை இலச்சையால் மூடப்படச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 109:29 
என் விரோதிகள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 109:29

தொழுகை ஆராதனை
************************ 
என் விரோதிகள் சபித்தாலும் எங்களை ஆசீர்வதிக்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 109:28
கர்த்தராகிய உம்மை என் வாயினால் மிகவும் துதித்து தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன் 
சங் 109:30
கர்த்தராகிய உம்மை அநேகர் நடுவில் புகழ்ந்து தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் 
சங் 109:30
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக