24th September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 118 :8-15
துதி ஆராதனை
+++++++++++++++
என் பெலனுமான கர்த்தராகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா சங் 118:14
உமது பேரில் பற்றுதலாயிருப்பதை நலமாயிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:8
பராக்கிரமஞ்செய்யும் உமது வலதுகரத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:15
என் இரட்சிப்புமுமான கர்த்தராகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:14
உம்முடைய நாமத்தினால் ஜாதிகளை சங்கரிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:10
என்னை சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறவர்களை உம்முடைய நாமத்தினால் சங்கரிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:11
என் கீதமுமானவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 118:14
எனக்கு உதவி செய்த கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 118:13
என்னை வளைந்து கொள்ளுகிற எல்லா ஜாதியாரையும் உம்முடைய நாமத்தினால் சங்கரிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 118:10
நன்றி ஆராதனை
+++++++++++++++++
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் உமது பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று உணர்த்தின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:8
பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும் உமது பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று உணர்த்தின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:9
நான் விழும்படி சத்துரு என்னை தள்ளினாலும் எனக்கு உதவி செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:13
தொழுகை ஆராதனை
+++++++++++++++++++
தேனீக்களைப்போல என்னை வளைந்து கொள்ளுகிறவர்களை
உமது நாமத்தினால் சங்கரிக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 118:12
என்னை வளைந்து கொள்ளுகிறவர்களை முள்ளில் பற்றின நெருப்பைப் போல அணைந்துப் போகச் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 118:12
என்னை வளைந்து கொள்ளுகிறவர்களை உம்முடைய நாமத்தினால் சங்கரிக்கச் செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 118:12
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக