புதன், 28 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை 28th September 2022

சத்திய ஆராதனை
28th September 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119:1-8

ஆலேப் 
+++++++
துதி ஆராதனை 
*******************
உம்முடைய நீதி நியாயங்களை கற்றுக்கொள்ளச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:7 
உம்முடைய பிரமாணங்களை கைக்கொள்ள செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:8
உம்முடைய பிரமாணங்களால் என் நடைகளை ஸ்திரப்படச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:5

உம்முடைய வேதத்தின்படி எங்களை நடக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:1 
உத்தமமார்க்கத்தாராகிய 
எங்களை பாக்கியவான்களாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:1 
உமது கட்டளைகளை கருத்தாய்க் கைக்கொள்ளும்படி செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:4

உமது கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி கற்பிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 119:4
உம்முடைய கற்பனைகளை கண்ணோக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:6 
உம்முடைய சாட்சிகளை கைக்கொள்ளச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:2

நன்றி ஆராதனை 
**********************
உம்மை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்களை பாக்கியவான்களாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:2 
அநியாயம் செய்யாதவர்களை உம்முடைய வேதத்தின்படி பாக்கியவான்களாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:3 
பாக்கியவான்களை உம்முடைய வழிகளில் நடக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:3

தொழுகை ஆராதனை
*************************
செம்மையான இருதயத்தால் நான் துதிக்கிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன் 
சங் 119:7 
முற்றிலும் என்னைக் கைவிடாத தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:8 
என்னை வெட்கப்பட்டு போகாமலிருக்கச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 119:6
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக