9th September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 111:1-6
துதி ஆராதனை
********************
மகிமையான உமது செயல்களுக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 111:3
மகத்துவமுள்ள உமது செயல்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 111:3
என்றென்றைக்கும் நிற்கிற உமது நீதிக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 111:3
இரக்கமுள்ளவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 111:4
மனஉருக்கமுள்ளராகிய கர்த்தராகிய தேவன் உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 111:4
உம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 111:4
பெரியவைகளுமாயிருக்கிற உம்முடைய செய்கைளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 111:2
எல்லோராலும் பிரியப்படுகிற உம்முடைய செய்கைளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 111:2
எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிற உம்முடைய செய்கைளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 111:2
நன்றி ஆராதனை
********************* செம்மையானவர்களுடைய சங்கத்தில் என் முழு இருதயத்தோடு உம்மை துதிக்கச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 111:1
சபையில் உம்மை முழு இருதயத்தோடு துதிக்கச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 111:1
தமக்கு பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 111:5
தொழுகை ஆராதனை
************************
உம்முடைய அதிசயமான செய்கைளுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 111:4
என்றென்றைக்கும் நினைக்கின்ற உமது உடன்படிக்கைக்காக தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 111:5
ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்த தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 111:6
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக