திங்கள், 5 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை 5th September 2022

சத்திய ஆராதனை
5th September 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 107:38-43 

துதி ஆராதனை
*******************
அவர்களை ஆசீர்வதிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 107:38 
அவர்களை மிகுதியும் பெருக செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 107:38 
அவர்களுடைய மிருகஜீவன்களை குறையாதிருக்கப் பண்ணுகிற தேவனே 
உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 10738

அவர்களை இடுக்கத்தினால் குறைவுபட்டுத் தாழ்வடையச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 107:39 
அவர்களை ஆபத்தினால் குறைவுபட்டுத் தாழ்வடையச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 107:39 
அவர்களை துயரத்தினால் குறைவுபட்டுத் தாழ்வடையச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 107:39

அவர்கள் பிரபுக்களின் மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 107:40
வழியில்லாத அவாந்தரவெளியிலே அவர்களைத் திரியச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 107:40 
நியாயக்கேடெல்லாம் வாயை மூடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 107:42

நன்றி ஆராதனை 
*********************
எளியவனை சிறுமையினின்று எடுத்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 107:41 
எளியவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 107:41 
எளியவனின் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறதேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 107:41

தொழுகை ஆராதனை
*************************
உம்முடைய கிரியைகளை கண்டு உத்தமர்களை மகிழச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 107:42
இவைகளை ஞானமுள்ளவன் எவனோ அவனை கவனிக்க செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் 
சங் 107:43
ஞானவான்களை உம்முடைய கிருபைகளை உணர்ந்துகொள்ளச் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 107:43
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக