அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள்
அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்வதார்க வந்த பலரில் அவரும் ஒருவர்கள். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்து இருமாதத்தில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார்
தந்தையுடன் வேலூரில் விடுமுறை கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டி போட்டன
என்ன சம்பவம்?
அந்த நள்ளிரவில் அவர் வீட்டு கதவினை தட்டுகின்றான் ஒரு பிராமணன், அவனின் கண்கள் டாக்டரம்மாவினை தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் என்ன என்கின்றார்? என் மனைவிக்கு பிரசவம் டாக்டரம்மாவினை அனுப்ப முடியுமா?
இல்லை அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள் நான் வரட்டுமா என்கின்றார் அவர்
இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்ணுக்கு பெண்ணே பிரசவம் பார்க்க வேண்டும் , கட்டுப்பாடு அது என்னால் மீறமுடியாது என கண்களை துடைத்துகொண்டே செல்கின்றார்
மறுநாள் அந்த கர்பிணியின் இறந்த உடலை அந்த ஐடாவின் வீட்டு முன்னால் எடுத்து செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத்தந்தை அழ, தன்னையறியாமல் ஐடாவும் அழுகின்றாள்
இருநாள் கழித்து ஒரு இஸ்லாமியருக்கு அதே தேவை. ஆனால் அதே கட்டுப்பாடு. டாக்டரம்மா இல்லாததால் கண்களை துடைத்துவிட்டு செல்கின்றார் அந்த இஸ்லாமிய கணவன்
மறுநாள் அதே ஊர்வலம்
மனதால் வெடித்து அழுதாள் ஐடா, என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்
அவளுக்கு ஏதாவது அம்மக்களுக்கு செய்ய தோன்றிற்று, நிச்சயம் இங்கு மகளிரை படிக்க வைக்க முடியாது, நாமே டாக்டராகி இவர்களோடு தங்கிவிட்டால்?
அந்த வைராக்கியம் அன்றே வந்தது, அமெரிக்கா சென்று படித்து டாக்டரனாள், பெரும் வேலைவாய்ப்பு வந்தாலும் அவள் கண்களில் அந்த இரு ஊர்வலங்களும் வந்து அவள் வைராக்கியத்தை அதிகரித்துகொண்டே இருந்தன
திரும்பி அதே வேலூருக்கு வந்தாள், இனி ஒரு கர்பிணியினை சாகவிடமாட்டேன் என சொல்லி அந்த மருத்துவனையினை தொடங்கினாள்
அதுதான் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரியாக இன்று வளர்ந்து நிற்கின்றது, உலகின் மிக தரமான மருத்துவமனை என அதற்கு இன்றும் பெயர்
அப்பல்லோ, குளோபல், ராமசந்திரா என பல வந்தாலும் இன்று மிக பெரியதும், மிக மிக தரமான சிகிச்சை கொடுப்பதும் அந்த வேலூரி சிஎம்சி மருத்துவமனையே
அவள் யார்? அவளுக்கும் இம்மக்களுக்கும் என்ன சம்பந்தம்?
ஆனால் நம் மக்களுக்காக அழுதிருக்கின்றாள், நம் மக்களின் சாவினை தடுக்க டாக்டராகி திரும்பி வந்து இங்கு தன் வாழ்வினை அர்பணித்திருக்கின்றாள்
உந்தன் சித்தம் போல் நடத்தும்
கர்த்தாவே நீர் நித்தம் என்னை
எந்தன் சித்தம் போல வேண்டாம்
என் பிதாவே என் தேவனே!
எந்தன் சித்தம் போல வேண்டாம்
என் பிதாவே என் தேவனே!
இன்பமான வாழ்க்கை வேண்டேன்!
இனிய செல்வம் சீரும் வேண்டேன்!
துன்பமற்ற சுகமும் வேண்டேன்!
நின் தொண்டு செய்யும் அடியேன்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக