வெள்ளி, 2 செப்டம்பர், 2022

பரிசுத்த வேதாகமம்

*எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் பரிசுத்த வேதாகமம்* 

( HISTORICAL BACKGROUND OF OUR HOLY BIBLE )

 *BIBLE* என்ற பெயர்  கிரேக்க மொழியில் இருந்து வந்தது.  

√  *BIBLE* - கிரேக்க மொழி

√  *_Bibilia_*  இது பன்மை சொல் 

√ இதற்கு *புத்தகங்களின் புத்தகம்* என்று பொருள்.  

√ இதற்கு *எழுதப்பட்ட ஒரு பத்திரம், சாகும் நேரத்தில் எழுதப்பட்ட ஒரு உயில்*, *ஏற்பாடு* என்ற மற்ற பெயர்களும் உண்டு.


📖 சுருள்களாக இருந்த வேதத்தை,  அதிகாரங்களாக பிரித்தவர் 

 *கார்டினல் ஹீகோ டி எஸ் கேரா*  
Cardinal Hugo De S. Caro


√ இவர் 1234 ல் அதிகாரங்களாக பிரித்தார்

📖 சுருள்களாக இருந்த வேதத்தை,  வசனங்களாக  பிரித்தவர் 

*ராபெர்ட்ஸ் ஸ்டீபென்ஸ்*
Robertus Stephanus


√  இவர் 1551 இல் வசனங்களாக பிரித்தார்

*பரிசுத்த வேதாகமம் எதன்  அடிப்படையில்  அமைக்கப்பட்டது* ⁉️

தலைப்புகளின் அடிப்படையில்


📍 ஆதியாகமம்  முதல் மல்கியா வரை உள்ள 39 புத்தகமும் தலைப்புகளின்  அடிப்படையில் இருக்கிறது...


📖 *நம் கையில் இருக்கும் தமிழ்  வேதாகமம் எந்த மொழிகளில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது* ⁉️ 


👉🏻 நம் கையில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வேதாகமம்,  *மூல பாஷையாகிய எபிரேயம் மற்றும் கிரேக்க மொழியில்* இருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது..

√ பழைய ஏற்பாடு - *எபிரேயு பாஷை* 

√ புதிய ஏற்பாடு - *கிரேக்க பாஷை*

*1. சட்ட / நியாய பிரமாண புத்தகம்*  

➖  ஆதியாகமம் முதல் உபாகமம் வரை

*2. வரலாறு புத்தகம்* 

➖ யோசுவா முதல் எஸ்தர் வரை

*3. கவிதை புத்தகம்* 

➖ யோபு முதல் உன்னதப்பாட்டு வரை


*4. தீர்க்கதரிசன புத்தகம்*

➖ ஏசாயா முதல் மல்கியா வரை..

      👉🏻 [ பெரிய தீர்க்கதரிசன புத்தகம் :- 
ஏசாயா முதல் தானியேல் வரை] 

     👉🏻  [சிறிய தீர்க்கதரிசன புத்தகம் :- 
ஓசியா முதல் மல்கியா வரை ]

📖 *பழைய ஏற்பாட்டின் சரித்திர புத்தகம் எங்கு  முடிவடைகிறது*  ⁉️

 👉🏻 *எஸ்தர்* 


*பழைய ஏற்பாடு எஸ்தர் புத்தகத்துடன் முடிவடைகிறது..* 

👉🏻 மீதி புத்தகங்களை ஒன்றோடொன்று பொருத்தி படிக்க வேண்டும்..

● யோபு - ஆதியாகமம்  கால கட்டத்தில்  சேர்த்து கொள்ளலாம். 

● சங்கீதம் - மோசே, தாவீது, சாலொமோன் போன்றவர்கள் எழுதி இருப்பதால் இதை ராஜாக்கள் புத்தகத்தோடு சேர்த்து கொள்ளலாம். 

● நீதிமொழிகள், பிரசங்கி, உண்ணதப்பாட்டு - சாலொமோன் நாட்களில் எழுதப்பட்டது. எனவே ராஜாக்கள் புத்தகத்தோடு சேர்த்து கொள்ளலாம்.. 

● ஏசாயா,  எரேமியா  - 
புலம்பல், எசேக்கியேல் போன்ற புத்தகங்கள்... 

• யூதாவின் ராாவாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில் வாழ்ந்தவர். 
ஏசாயா  1:1 
எரேமியா  1:1 

எனவே இதை ராஜாக்கள் புத்தகத்தோடு பொருத்தி படிக்க வேண்டும்.

● தானியேல் - இஸ்ரேயேலர்கள் சிறையிருப்புக்கு சென்ற போது எழுதப்பட்டது. 

● ஓசியா - மீகா போன்ற புத்தகம்  ராஜாக்கள் புத்தகத்தோடு பொருத்தி படிக்க வேண்டும். 

● ஆகாய் , சகரியா - சிறையிருப்பில் இருந்து
திரும்பி வரும்போது எழுதப்பட்டது. 

எனவே பழைய ஏற்பாட்டு எஸ்தர் புத்தகத்தோடு முடிவடைகிறது. மற்ற புத்தகத்தை எல்லாம் பொருத்தி படிக்க வேண்டும்...


📖 *எபிரேய பாஷையில் பழைய ஏற்பாடு புத்தகங்கள் மொத்தம் எத்தனை* ⁉️


👉🏻 *24 புத்தகங்கள்* 


எபிரேய பாஷையில் பழைய ஏற்பாடு புத்தகங்கள் மொத்தம் *24* புத்தகங்கள்..


📖 *எபிரேய பாஷையில் பழைய ஏற்பாட்டுக்கு என்ன பெயர்*  ⁉️

👉🏻  *"TaNaK"*  (தானாக்)

👉🏻 எபிரேய பாஷையில் பழைய ஏற்பாட்டுக்கு *"தானாக்"* ( TaNaK ) என்று பெயர்


👉🏻 யூதர்கள் இந்த *தானாக்கை* தான் இன்று வரை படிக்கிறார்கள்..


👉🏻 யூதர்கள் பைபிள் படிப்பதில்லை.

👉🏻 இரட்சிக்கப்பட்ட யூதர்கள் தவிர பாரம்பரிய யூதர்கள் பைபிள் படிப்பதில்லை.

📖  நமக்கு 39 புத்தகங்கள் இருக்கிறது.
தானாக்கில்  24 புத்தகங்கள் என்று பார்த்தோம்.
நாம் வைத்திருக்கும் பழைய ஏற்பாட்டிற்கும்,  யூதர்கள் 
வைத்திருக்கும் தானாக் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்... ?

*தானாக்கில் புத்தகங்கள் குறைந்திருக்கிறதா*⁉️

👉🏻 *இல்லை..  அதே புத்தகங்கள் அப்படியே இருக்கிறது.* 


🔰 பின்பு எப்படி புத்தகங்கள் குறைந்தது ⁉️


✳️  1 சாமுயேல் , 2 சாமுயேல் தானாக்கில்  *சாமுயேல்* என்று ஒரே புத்தகமாகவும்,

✳️ 1 ராஜாக்கள், 2 ராஜாக்கள்,   தானாக்கில்  *ராஜாக்கள்* என்று ஒரே புத்தகமாகவும்,

✳️ 1 நாளாகமம், 2 நாளாகமம்,   தானாக்கில்  *நாளாகமம்* என்று ஒரே புத்தகமாகவும்,

✳️ *எஸ்றா , நெகேமியா* தானாக்கிலே ஒரே புத்தகமாகவும்,

✳️ *ஓசியா* முதல் *மல்கியா* வரை ( 12 புத்தகங்கள்) ஒரே புத்தகமாகவும் தானாக்கிலே அமைக்கப்பட்டிருக்கிறது

எனவே,  

👉🏻 *அவர்களுக்கு 24 புத்தகங்கள்* 

👉🏻 *நமக்கு 39 புத்தகங்கள்*


📖 *எபிரேய மொழியில் பழைய ஏற்பாட்டை ( தானாக்கை ) எத்தனை பிரிவுகளாக பிரித்தார்கள்* ⁉️

👉🏻*மூன்று*

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

¶ 1.  *தோரா* (TORAH) 

¶ 2. *நெபீம்* (NEBHIM) 

¶ 3. *கெத்துபீம்* (KETHUBIM)


💢  *தோரா*  💢
• ஆதியாகமம் 
• யாத்திராகமம் 
• லேவியராகமம்
• எண்ணாகமம் 
• உபாகமம் 


💢  *நெபீம்* 💢

• யோசுவா
• நியாயாதிபதிகள்
• சாமுயேல் 
• ராஜாக்கள் 
• ஏசாயா 
• எரேமியா 
• எசேக்கியேல் 
• சிறிய தீர்க்கதரிசன புத்தகம் 
(ஓசியா முதல் மல்கியா வரை) 
( இதில் 19 புத்தகங்கள் அடங்கும்) 


💢  *கெத்துபீம்* 💢

• சங்கீதம் 
• நீதிமொழிகள் 
• யோபு 
• உன்னதபாட்டு 
• ரூத் 
• புலம்பல் 
• பிரசங்கி 
• எஸ்தர் 
• தானியேல் 
• எஸ்றா 
• நெகேமியா 
• நாளாகமம்


📖 *மறுபெயர் என்ன* 

↪️ 1. தோரா - *_நியாயப்பிரமாணம்_* என்றும்


↪️ 2. தெபீம் - *_தீர்க்கதரிசன  ஆகமம்_* என்றும் அழைக்கப்பட்டது 


 *References :-* 

( மத்தேயு 11: 31, 
மத்தேயு 22: 36-40, 
அ்போஸ்தலர் 13:15


📍  *தோரா* -விற்கு  தலைவராக  *மோசேயையும்* , 


📍 *நெபீம்* - க்கு  தலைவராக *எலியாவையும்* வைத்தார்கள் ... 


👉🏻 மோசே,  எலியா சேர்த்து சொல்லப்படும் இடங்கள் தானாக்கை குறிப்பதாக இருக்கிறது... 

 ( மத்தேயு 17:3 )

📖 *எபிரேய மொழியில் ( தானாக்) 24 புத்தகங்கள் நமக்கு தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யும் போது எப்படி 39 புத்தகங்கள் ஆனது* ⁉️

⚜️ இதற்கான பதில் வரலாற்று பின்னணியில் நாம் பார்க்க வேண்டும்...

1. பழைய ஏற்பாடு மல்கியாவோடு முடிவடைகிறது

2. புதிய ஏற்பாடு மத்தேயுவில் ஆரம்பிக்கிறது

3. பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் 400 வருஷங்கள் இடைப்பட்ட காலங்கள் ஆகும். 

 *இந்த 400 வருடங்களில் நடந்த சம்பவங்கள்* .. 

⚜️ கிரேக்க சாம்ராஜ்யம் உலக சாம்ராஜ்யமாக இருந்தது

⚜️ இந்த கிரேக்க சாம்ராஜ்யத்தை நிறுவியவர் *மகா அலெக்சாண்டர்* .

⚜️ இவர் ஒரு சட்டம் கொண்டு வந்தார் 

☝🏻 *ஒரே ஆட்சி ஒரே மொழி* ☝🏻

⚜️ எங்கும் கிரேக்க மொழி ஆட்சி மொழியாக அமல்படுத்தப்பட்டது.

⚜️ இந்த நாட்களில் சிதேக்கியா ராஜாவின் காலத்தில் பாபிலோனுக்கு சிறைப்பிடிக்கப்பட்ட யூதர்கள் 70 வருஷம் முடிந்து திரும்பி வரும்போது,  சிறைப்பட்டு சென்றவர்கள் எல்லாரும் திரும்பி வரவில்லை. 
இவர்கள் அனேகர் எபிரேய மொழியை அறியாதிருந்தார்கள். ஆனால்  இவர்கள் அனைவரும் கிரேக்க மொழியை அறிந்திருந்தனர்..  அனேகர் பல இடங்களுக்கு சிதறடிக்கப்பட்டு இருந்தனர். 
( Ex : Nehemiah அர்தசஷ்டா ராஜாவின் அரண்மனையில் பான பாத்திரக்காரனாக இருந்தார் ) 

⚜️ கிரேக்க பாஷை மட்டுமே அறிந்திருந்ததினால்,   இவர்களுக்கு தானாக்கை வாசிக்க வாய்ப்பு இல்லாமல் போனது.

📍 *எபிரேயு பாஷையிலிருந்து கிரேக்கும் பாஷைக்கு மொழி பெயர்க்கும் போது நடந்த ஒரு சில காரியங்கள்* 


⚜️ இந்த கிரேக்க ஆட்சி காலத்தில் *எலியேசர்* 
என்ற ஆசாரியன் இருந்தார்.  இவர் கிரேக்க மன்னன் இரண்டாம் டாலமியின் அனுமதியின் பேரில் 72 பேர் கொண்ட  ஒரு குழு (70 என்றும் சொல்கிறார்கள்)  அமைத்து ( கோத்திரத்துக்கு 6 பேர்) 
அவர்களை *அலெக்சாந்திரியா* என்ற பட்டணத்தில் *பாரோஸ்* என்ற தீவிற்கு கொண்டு போய்  எபிரேய மொழியில் இருந்த தானாக்கை ( பழைய ஏற்பாடு)  கிரேக்க மொழியில் மொழி பெயர்த்தனர். 

⚜️ இதை *பாப்பிரஸ்* துண்டுகளில் (புல்லில் இருந்து உருவாக்கப்பட்ட தாள்) மையை கொண்டு எழுதினார்கள். 
(இந்த *பாப்பிரஸ்* என்ற வார்த்தையே *பைபிள்* ஆனது).

◆ இவ்வாறு மொழியாக்கம் செய்யும் போது ஒரு யூத ரபீ எபிரேய வேதத்திலிருந்து ஒரு வசனத்தை வாசிக்க, மற்றொருவர் இதை கிரேக்கிலே சொல்லுவார். அவ்வாறு சொல்லும்போது கர்த்தர் அதாவது *யெகோவா* என்ற பதம் வரும் போதெல்லாம், அதை உச்சரிக்கும் மூன்பாக யூத ரபிமார்கள் தங்களை கத்திகரித்து கொள்வார்கள்.

◆ குளித்து, வாயை சுத்தம் செய்து கொண்டு வந்து, அமர்ந்து தேவனுடையை நாமத்தை சொல்வார்கள். 

◆ எழுதுகிறவன் தன் பழைய எழுத்தாணியை வைத்துவிட்டு ஒரு புதிய எழுத்தாணியை எடுத்து கொண்டு புதிய மையை மாற்றி எழுதுவார். 

◆ ஒரே வசனத்தில் 4 முறை கர்த்தர் என்று வந்தாலும் ஒவ்வொரு முறையும் தன்னை
சுத்திகரிப்பார். எழுதுபவரும் சலிக்காமல் பேனாவையும், மையையும் மாற்றுவார்.

⚜️ *கிமு 250* ல் எபிரேய மொழியில் இருந்த தானாக் , கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

◆ கிரேக்க பாஷையில் ஒரு ஒரு எழுத்தும் மிக நீளமாக வர ஆரம்பித்துவிட்டது.  தானாக் ரொம்ப பெரியதாக ஆரம்பித்தது.. 

◆ இவ்வாறு கிரேக்க மொழியில் தானாக மொழியாக்கம் செய்யும்போது *சாமுயேல்,  ராஜாக்கள்* போன்ற புத்தகங்களின்  பக்கங்கள் அதிகமானது.  எனவே இவைகளை இரண்டாகப் பிரித்தார்கள்.. 

👉🏻 இப்போது மொத்த புத்தகங்கள் 39 ஆனது..


📖 *கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தானாக்கை  ( பழைய ஏற்பாடு) என்ன என்று அழைத்தனர்* ⁉️


📝 *செப்டுவஜின்ட்* 
( SEPTUVAGINT )


👉🏻 நாம் நினைவில் வைக்க வேண்டியது ..

📍 பழைய ஏற்பாட்டுக்கு எபிரேய பாஷையில் *தானாக்* என்று பெயர். ( TaNaK )

📍 கிரேக்க பாஷையில் *செப்டுவஜின்ட்* என்று பெயர் 
( SEPTUVAGINT )


👉🏻 ஏன் எபிரேயு பாஷையிலிருந்து கிரேக்கு பாஷைக்கு வேதத்தை மொழி பெயர்த்தார்கள் ⁉️

⚜️ கிரேக்க மன்னன் *“இரண்டாம் தாலமி"* காலத்தில்தான் இந்த மொழி பெயர்ப்பு வேலைகள் நடந்தது. 

இவருடைய முழு பெயர் *தாலமிபிலாடெல்பஸ்*
 *(Ptolemy Philadelphus)* 


⚜️  *ஏன் இவர் கிரேக்க மொழி பெயர்ப்புக்கு ஒத்துக் கொண்டார்* ⁉️

◆ யூதர்கள் மத வைராக்கியம் நிறைந்தவர்கள், தங்கள் ஆலய கூடுகைகளில் எபிரேயு பாஷையில்தான் வேதத்தை வாசித்து கொண்டு இருந்தார்கள். இப்போது கிரேக்கு பாஷையில் மொழி பெயர்த்துவிட்டால் ஆராதனையை கிரேக்கு பாஷையில் நடத்து ஆரம்பித்து விடுவார்கள். சில காலத்திற்குள் சுத்தமாக தங்கள் தாய் மொழியை மறந்து கிரேக்க மொழிக்குள் வந்து விடுவார்கள் என்று நினைந்து இந்த மொழி பெயர்ப்பு வேலையை செய்யுமாறு கூறினார்.

◆ இதற்கு யூத ரபிமார்கள் சம்மதித்தார்கள்.


🌟  *செப்டுவஜின்ட்* - ல் 39 புத்தகங்கள் 4 பிரிவுகளாக பிரித்தார்கள் 

• 1. பஞ்சாகமம்
• 2. வரலாற்று ஆகமங்கள்
• 3. கவிதை புத்தகங்கள்
• 4. தீர்க்கதரிசன புத்தகங்கள் 

🌟 (தானாக்கில் 3 பிரிவுகள்.. மறந்து விடக்கூடாது..) 

• 1. தோரா
• 2. நெபீம்
• 3. கெத்துபீம் 


⚜️ இதை அடிப்படையாகக் கொண்டே தமிழ் வேதம் மொழிபெயர்க்கப்பட்டது இதைத்தான் வேதத்தின் முதல் பக்கத்தில் பார்க்கிறோம்.


📖 *பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர் யார்* ⁉️


👉🏻 சீகன் பால்கு & ஆறுமுக நாவலர் 
( அறுமுக நாவலர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு சைவ புலவர். சீகன் பால்க் மொழிபெயர்ப்பு செய்த  வேதாகமத்தில் உள்ள நிறைய பெயர்கள் சமஸ்கிருத மொழியில் இருக்கும். அவைகளுக்கு எல்லாம் பெயர் கொடுத்து ,  முழுவதுமாக முடித்து வைத்தவர் ஆறுமுக நாவலர் ஆவார்.. )  

■ முழு பெயர் : 

~ பர்த்தலோமேயு சீகன்பால்கு
 *〔 BARTHOLOMEW ZIEGENBALG 〕* 

■ பிறந்த தேதி :  

~ 10-07-1682

■ பிறந்த ஊர் :

 ~ ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் 


• பரிசுத்த வேதாகமம் மொழி பெயர்ப்பு (எபிரேயு - தமிழ்) 

■ இவர் புதிய ஏற்பாட்டை முதலில் தமிழில் மொழி பெயர்த்தார். 
1708 - தொடங்கி 1711– (4 வருஷங்கள்) மொழி பெயர்த்து முடித்தார்.


♣︎ சீகன் பால்கு தமிழை கற்பதில் மிகவும் கஷ்டப்பட்டர்.

♣︎ திண்ணை பள்ளி கூடத்தில் சிறுவர்களுடன் அமர்ந்து மணலில் எழுதி தமிழ்
எழுத்துக்களை படித்தார். (கையில் இரத்தம் வர) 

♣︎ தமிழை கற்கும் வரை தன் தாய் மொழி உட்பட எந்த மொழி நூல்களையும் படிக்க
கூடாது என்று வைராக்கியம் கொண்டு படித்தார்.

♣︎ ஒரு நாளைக்கு 10 மணிநேரம் படித்தார்.

♣︎ 8 மாதங்களில் தமிழில் பிழையின்றி பேசவும், எழுதவும் துவங்கிவிட்டார்.

♣︎ இவர் மொழி பெயர்த்த புதிய ஏற்பாடு 494 பக்கங்களைக் கொண்டது.

♣︎ அடுத்ததாக மொழி பெயர்ப்பை அச்சடிக்க வேண்டும்.

♣︎ அச்சு இயந்திரம் இங்கிலாந்திலிருந்து வந்தது. அச்சு இயந்திரம் மிகப்பெரியதாக இருந்தது. அதை இயக்க ஆளில்லை.

♣︎ தரங்கம்பாடியில் இருக்கிறவர்கள் அதை வினோத பொருளாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

♣︎ இதை இயக்க ராணுவத்தில் ஒருவர் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை அழைத்து வந்தார்.

♣︎ ஜெர்மனியிலிருந்து அச்சு எழுத்துக்கள் வந்தது. அவை மிகவும் பெரியதாக இருந்தது.

♣︎ தன்னுடைய முயற்சியில் தளராத சீகன்  பால்கு , தரங்கம்பாடியிலேயே, அவரே அச்செழுத்துக்களை வார்ப்பிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

♣︎ அச்சகம், அச்செழுத்து வார்ப்பு இவ்விரண்டும் இந்தியாவில் முதன் முதலில் துவங்கப்பட்டது நமது தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் தான்.  

📖 முதலில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் நமது *வேத புத்தகம்* தான் 🔥

 *இதுவே தமிழ் வேதம் மொழிபெயர்க்கப்பட்ட வரலாற்று ஆகும்.*

📖  *LXX* என்ற எழுத்து எதை குறிக்கிறது ⁉️


LXX  - *இலத்தின் பைபிள்* 


◆ இதற்குபின் கிரேக்கிலிருந்து இத்தாலிக்கு வேதாகமத்தை மொழியாக்கம் செய்தனர்.

 *இதன் பெயர் L X X - இலத்தீன் பைபிள்* 

L    --> 50

X   --> 10

X   --> 10
           ----
 Total  70 
           ----
           

◆ 70 பேர் கொண்ட குழு எபிரேயுவிலிருந்து கிரேக்குக்கு மொழி பெயர்த்ததால் *இலத்தீன் பைபிளுக்கு LXX என்ற பெயர் வந்தது.* 


📍 70 பேர் (72 என்றும் சொல்கிறார்கள்)  ஏனென்றால் *செபடுவஜன்ட் என்றால் கிரேக்கில் 70 என்று அர்த்தம்.* 



◆ 1. எபிரேயு மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடு முதலில் *கிரேக்க* மொழியிலும் பின்பு *இலத்தீன்* மொழியிலும், பின்பு *பிரெஞ்ச்* மொழியிலும் பின்பு *ஆங்கில* மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு இன்று ஏறக்குறைய 2300 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 

◆ உலகமெங்கும் உள்ள 90 சதவீத ஜனங்களின் கைகளில் *"பரிசுத்த வேதாகமம்"* தவழ்ந்து கொண்டு இருக்கிறது.

📖  *திருவிவிலியத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள்* ⁉️


[2] *46 புத்தகங்கள்*


● 1. எபிரேயு பாஷையில் =  24 புத்தகங்கள்

● 2. நமக்கு பழைய ஏற்பாட்டில் = 39  புத்தகங்கள்

● 3. திருலிலிலியத்தில் = 
46 புத்தகங்கள்

📖 *நமக்கு 39 புத்தகங்கள் திருவிவிலியத்தில் எவ்வாறு 46 புத்தகங்கள் ஆனது* ⁉️

 
◆ பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் 400 ஆண்டுகள் என்று பார்த்தோம். இந்த 400 ஆண்டுகளில் ஒரு சில நிகழ்ச்சிகள் நடந்தன.


♣︎  மகா  அலேக்சாந்தர் மரணம்

♣︎ அவருடைய 4 தளபதிகள் மூலம் ஆட்சி பிரிக்கப்படுகிறது

♣︎ இந்த நாட்களில் யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் பிரச்சனை கிளம்புகிறது.

♣︎ இஸ்ரயேல் தேசத்தில் இருந்த யூதர்கள் கிரேக்கருக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.


♣︎ கிரேக்கருக்கு விரோதமாய் எழும்பின யூத கூட்டத்தாருக்கு *மக்கபெயர்* என்று பெயர்

♣︎ யூதர்களை கிரேக்கர்கள் கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர்


♣︎ இதனால் யூதர்களில் அரசியல் ரீதியாக ஒரு குழுவும், மதரீதியாக ஒரு குழுவும் எழும்பினார்கள் 


♣︎ அரசியல் ரீதியாக எழும்பினவர்கள் *சதுசேயர்* எனவும், மதரீதியாக  எழும்பினவர்கன் *பரிசேயர்* எனவும் அழைக்கப்பட்டனர்.


( இது போன்ற பெயர்களை நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்க முடியாது )

♣︎ இந்த 400 வருடங்களில் கிரேக்க சாம்ராஜ்யம் போய் ரோம சாம்ராஜ்யம் வருகிறது.

♣︎ இந்த 400 வருடங்களில் சில ஆகம புத்தகங்களை,  சில மனிதர்கள் எழுதினார்கள். 

♣︎ இந்த ஆகம புத்தகங்களை பின் நாட்களில் பழைய ஏற்பாட்டு புத்தகங்களோடு சேர்த்தார்கள். இப்போது 39 புத்தகங்கள் 46 ஆனது.

♣︎ இதைத்தான் இன்று கத்தோலிக்க சபையார் பயன்படுத்தி வருகிறார்கள்.


📍 *கத்தோலிக்க வேதத்தில் இருக்கும் 7 புத்தகங்களின் பெயர் :-*

★ 1. தொபியாசு ஆகமம்

★ 2. யூதித் ஆகமம்

★ 3. ஞான ஆகமம்

★ 4. சீராக் ஆகமம்

★ 5. பாரூக் ஆகமம்

★ 6. 1 மக்கபே ஆகமம்

★ 7. 11 மக்கபே ஆகமம்


📍 *ஏன் இதை நாம் தள்ளிவிட்டோம்?* 

இதன் பெயரே *தள்ளுபடி ஆகமம்* எனவே நாம் தள்ளி விட்டோம்


📖 *கத்தோலிக்க வேதத்தில் பிற்சேர்க்கை ஆகமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது* ⁉️ 



[2] *அப்போகரிப்பா* 


📍 கத்தோலிக்க வேதத்தில் பிறசேர்க்கை ஆகமங்கள் (அப்போகரிப்பா) எப்போது பைபிளில்
இணைக்கப்பட்டது ⁉️

👉🏻 புதிய ஏற்பாட்டு காலத்தில் பரிசுத்த ரோம சாம்ராஜ்யத்தின் நாட்களில் போப் ஆட்சி காலத்தில் சேர்க்கப்பட்டது.

📍 *இந்த பிற்சேர்க்கை ஆகமங்களை படிக்கலாமா* ⁉️

👉🏻 படிக்கலாம். ஆனால் அது வேதம் அல்ல, தேவன் அதை அங்கீகரிக்கவில்லை.

👉🏻 பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் 400 வருட சரித்திரம் இருக்கிறது. இதை தெரிந்து கொண்டு புதிய ஏற்பாடு படிக்கும் போதுதான் புதிய ஏற்பாட்டை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக