27th September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 118:22-29
துதி ஆராதனை
*******************
என் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:28
நான் துதிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:28
நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:27
நான் உயர்த்துகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:28
முலைக்கல்லான கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:23
இரட்சிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:25
என்றுமுள்ள உமது கிருபைக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 118:29
நல்லவராக இருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 118:29
காரியத்தை வாய்க்கப் பண்ணுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 118:25
நன்றி ஆராதனை
*********************
வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலை கல்லான தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:22
எங்களுடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:23
உம்முடைய ஆலயத்திலிருந்து எங்களை ஆசீர்வதிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:26
பண்டிகைப் பலியை கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கட்டச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:27
தொழுகை ஆராதனை
***********************
கர்த்தருடைய நாமத்தினாலே ஸ்தோத்திரிக்கப்பட்டவராக வருகிற கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 118:27
கர்த்தர் உண்டுபண்ணின நாளுக்காக கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 118:24
நீர் உண்டுபண்ணின நாளிலே களிகூர்ந்து மகிழச் செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 118:24
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக