2nd September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 107:23-30
துதி ஆராதனை
*******************
கப்பலேறி தொழில் செய்கிறவர்களை உம்முடைய கிரியைகளை காணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 107:23
கடல் யாத்திரை பண்ணி தொழில் செய்கிறவர்களை உம்முடைய கிரியைகளைக் காணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 107:23
திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறவர்களை உம்முடைய அதிசயங்களை கானச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 107:23
ஆழத்திலே உம்முடைய அதிசயங்களைக் காணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 107:24
அவர்களை ஆகாயத்தில் ஏறி ஆழங்களில் இறங்கப் பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 107:26
அவர்களுடைய ஆத்துமாவைத் கிலேசத்தினால் கரைந்துப் போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 107:26
அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப் போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 107:27
அவர்களை வெறித்தவனைப் போல் அலைந்து தடுமாறச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 107:27
உமது கட்டளையினால் பெருங்காற்று எழும்பச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 107:29
நன்றி ஆராதனை
**********************
தங்கள் ஆபத்திலே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களை விடுவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 107:28
அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவித்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 107:28
அமைதலுண்டானதினிமித்தம் அவர்களை சந்தோஷப்படுத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 107:30
தொழுகை ஆராதனை
*************************
அதின் அலைகளைக் கொந்தளிக்கப் பண்ணுகிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங்107:25
அதின் அலைகளின் கொந்தளிப்பை அமர்த்துகிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 107:29
அதின் அலைகளை அடங்கப் பண்ணுகிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 107:29
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக