வெள்ளி, 16 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை 16th September 2022

சத்திய ஆராதனை
16th September 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 115:1-11

துதி ஆராதனை
*******************
உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 115:1 
பரலோகத்திலிருக்கிற எங்கள் தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 115:3 
உமக்கு சித்தமான யாவையும் செய்கிற பரலோகத்தின் தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 115:3

உமது கிருபையினிமித்தம் உம்முடைய நாமத்திற்கு மகிமை வரப்பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 115:1
உமது சத்தியத்தினிமித்தம் உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 115:1
உமக்கு பயப்படுகிறவர்களுக்கு கேடகமுமாயிரு்க்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 115:11

கர்த்தரை நம்பு என்று இஸ்ரவேலுக்கு உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 115:9 
ஆரோன் குடும்பத்தாரே கர்த்தரை நம்பு என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 115:10 
கர்த்தருக்கு பயப்படுகிறவர்களே கர்த்தரை நம்புங்கள் என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 115:11

நன்றி ஆராதனை
*********************
இஸ்ரவேலுக்கு துணையாயிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 115:9 
ஆரோன் குடும்பத்தாருக்கு துணையாயிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 115:10 
கர்த்தருக்குப் பயப்படுவர்களுக்கு துணையாயிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 115:11 

தொழுகை ஆராதனை
***********************
வெள்ளியும் பொன்னும் மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிற விக்கிரகங்கள் பேசாது காணாது கேளாது முகராது தொடாது நடவாது
சத்தமிடாது என்று உணர்த்துகிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 115:4-7
விக்கிரகங்களை பண்ணுகிறவர்கள் யாவரும் அவைகளைப் போலவே இருக்கிறார்கள் என்ற உணர்த்துகிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 115:8 
விக்கிரகங்களை நம்புகிறவர்கள் யாவரும் அவைகளைப் போலவே இருக்கிறார்கள் என்று உணர்த்துகிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 115:8
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக