23rd September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 118:1-7
துதி ஆராதனை
+++++++++++++++
நான் துதிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:1
நல்லவராகவே இருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:1
என்றுமுள்ள உமது கிருபைக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:1
என் பட்சத்திலிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:6
என்னை பயப்படாமல் இருக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:6
மனுஷனை எனக்கு எதுவும் செய்யாமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:6
நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்ட தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 118:5
நெருக்கத்தில் என்னை கேட்டருளின தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 118:5
நெருக்கத்தில் என்னை விசாலத்தில் வைத்த கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 118:5
நன்றி ஆராதனை
++++++++++++++++
எனக்கு அனுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் இருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:7
எனக்கு அனுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் என் பட்சத்திலிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:7
என் சத்துருக்களின் சரிக்கட்டுதலைக் கானச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:7
தொழுகை ஆராதனை
+++++++++++++++++++
இஸ்ரவேல் சொல்லுகிற என்றுமுள்ள உம்முடைய கிருபைக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 118:2
ஆரோனின் குடும்பத்தார் சொல்லுகிற என்றுமுள்ள உமது கிருபைக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 118:3
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்லுகிற என்றுமுள்ள உமது கிருபைக்காக தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 118:4
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக