10th September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 111:6-10
துதி ஆராதனை
******************* சத்தியமுமானவைகளாகிய உம்முடைய கரத்தின் கிரியைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 111:7
நியாயமுமானவைகளாகிய உம்முடைய கரத்தின் கிரியைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 111:7
தமது கிரியைகளின் பெலத்தை தமது ஜனங்களுக்கு தெரியப்படுத்தின தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 111:6
பரிசுத்தமுமான உமது நாமத்திற்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 111:9
பயங்கரமுமான(Reverend) உம்முடைய நாமத்திற்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 111:9
என்றைக்கும் நிற்கிற உமது புகழ்ச்சிக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 111:10
உண்மையானவைகளாகிய உம்முடைய கட்டளைகளுக்கெல்லாம் தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 111:7
உண்மையுமாய் செய்யப்பட்ட உமது கரத்தின் கிரியைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 111:8
செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகளாகிய உமது கிரியைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 111:8
நன்றி ஆராதனை
*********************
தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 111:9
கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று உணர்த்தின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 111:10
உம்முடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு என்று உணர்த்தின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 111:10
தொழுகை ஆராதனை
*************************
உமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக கட்டளையிட்ட தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 111:9
சதாகாலங்களுக்கும் உறுதியானவைகளாகிய உம்முடைய கிரியைகளுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 111:8
என்றென்றைக்குமுள்ள உமது கரத்தின் கிரியைகளுக்காக தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 111:8
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக