புதன், 21 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை 21st September 2022

சத்திய ஆராதனை
21st September 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 116:13-19 

துதி ஆராதனை 
+++++++++++++++
உம்முடைய பரிசுத்தவான்களின் மரணம் உம்முடைய பார்வைக்கு அருமையானபடியால் தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 116:15 
நான் உமது அடியாளின் புத்திரனாயிருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 116:16

உமது அடியேனாயிருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 116:16
என் கட்டுகளை அவிழ்த்து விட்டத் தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 116:16

உமது ஊழியக்காரனாக இருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 116:16
என்னை இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொள்ள செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 116:13

நன்றி ஆராதனை 
++++++++++++++++
நான் செய்த பொருத்தனைகளை உம்முடைய ஜனங்களுக்கு முன்பாக செலுத்தச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 116:14 
நான் உமக்கு செய்த பொருத்தனைகளை எருசலேமின் நடுவிலே நிறைவேற்றச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 116:18

தொழுகை ஆராதனை
+++++++++++++++++++
உமக்கு ஸ்தோத்திபலியைச் செலுத்தி உம்முடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறேன்  
சங் 116:17 
நான் உமக்கு செய்த பொருத்தனைகளை உம்முடைய ஆலயத்தின் பிரகாரங்களில் நிறைவேற்ற செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 116:19
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக