திங்கள், 19 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை 19th September 2022

சத்திய ஆராதனை
19th  September  2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை  மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 116:1-6

துதி ஆராதனை 
*******************
கிருபையுள்ள  பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 116:5 
நீதியுள்ளவராகிய தேவாதி தேவனே உமக்கு  கோடான கோடி அல்லேலூயா 
சங் 116:5 
மனஉருக்கமான தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 116:5

நான்  அன்புகூருகிற கர்த்தராகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 116:1 
சஞ்சலத்தை அடைந்த என்னை விடுவித்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 116:3 
என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சின எனக்கு செவி கொடுத்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 116:4

என் சத்தத்திற்குச் செவிகொடுத்த  தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 116:1 
என் விண்ணப்பத்தைக் கேட்ட தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 116:1 
தமது செவியை எனக்குச் சாய்த்த தேவனே உமக்கு கோடான கோடி  ஸ்தோத்திரம்
சங் 116:2

நன்றி ஆராதனை 
*********************
என்னை சுற்றி கொண்ட மரணக்கட்டுகளிலிருந்து விடுவித்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 116:3
இக்கட்டை அடைந்த என்னை  விடுவித்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 116:3 
கபடற்றவர்களைக்  காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 116:6

தொழுகை ஆராதனை
***********************
எனக்குச் செவிசாய்த்தபடியால் உயிரோடிருக்குமளவும் தேவனே உம்மை தொழுது கொள்ளுவேன் 
சங் 116:2
என் ஆத்துமாவை விடுவித்த  தேவனே உம்முடைய நாமத்தை பணிந்து கொள்ளுவேன்
சங் 116:4
என்னைப் பிடித்த பாதாள இடுக்கண்களிலிருந்து இரட்சித்த தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 116:3
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக