26th September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 118:15-21
துதி ஆராதனை
உயர்ந்திருக்கிற உமது வலதுகரத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:16
பராக்கிரமஞ்செய்யும் உமது வலதுகரத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:16
என்னை சாவால் பிழைத்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 118:17
எனக்கு இட்சிப்பாயிருந்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:21
என்னை சாவுக்கு ஒப்புக்கொடுக்காத தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:18
வாசலாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 118:20
எனக்கு செவிக் கொடுத்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 118:21
இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 11 8:15
நான் சாவாமல் உமது செய்கைகளை விவரிக்கச் செய்கிற தேவனே உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 118:17
நன்றி ஆராதனை
++++++++++++++++
என்னை வெகுவாய்த் தண்டித்தும் சாவுக்கு ஒப்புக்கூடாத தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:18
நீதியின் வாசல்களுக்குள் என்னை பிரவேசிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:19
எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால் உம்மை துதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 118:21
தொழுகை ஆராதனை
+++++++++++++++++++
நீதியின் வாசல்களுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 118:19
நீதிமான்களுடைய கூடாரங்களுக்காக தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 118:15
நீதிமான்கள் பிரவேசிக்கிற வாசலுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 118:20
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக