6th September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 108
துதி ஆராதனை
*******************
வானங்களுக்கு மேலாக உயர்ந்திருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 108:5
தமது பரிசுத்தத்தை கொண்டு விளம்பின தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 108:7
எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுகிற தேவனே உமக்கு கோடானகோடி அல்லேலூயா
சங் 108:13
வானங்களுக்கு மேலாக எட்டுகிற உமது கிருபைக்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 108:4
மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிற உமது சத்தியத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 108:4
பூமியனைத்தின் மேலும் உயர்ந்திருக்கிற உமது மகிமைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 108:5
உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு எங்கள் ஜெபத்தை கேட்டருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 108:6 ஜனங்களுக்குள்ளே துதிக்கப்படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 108:3
ஜாதிகளுக்குள்ளே கீர்த்தனைம் பண்ணப்படுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 108:3
நன்றி ஆராதனை
*********************
உமது வலது கரத்தினால் எங்களை இரட்சித்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 108:6
இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 108:12
மனுஷனுடைய உதவி விருதா என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 108:12
தொழுகை ஆராதனை
************************
உம்மை பாடிக்கீர்த்தனம் பண்ண என் இருதயத்தை ஆயத்தம் பண்ணின தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 108:1
என் மகிமையும் பாட ஆயத்தமாக்கின தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 108:1
எங்களை பராக்கிரமஞ்செய்ய வைக்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 108:13
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக