15th September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 114
துதி ஆராதனை
*******************
இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்பட்டச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 114:1
யாக்கோபின் குடும்பத்தை அந்நிய பாஷைக்காரராண ஜனத்திலிருந்து புறப்படச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 114:1
பூமியை உமக்கு முன்பாக அதிரச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 114:7
உம்முடைய பரிசுத்த ஸ்தானமாக யூதாவை மாற்றின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 114:2
இஸ்ரவேலை உம்முடைய ராஜ்ஜியமாக மாற்றின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 114:2
உம்மைக் கண்டு கடலை விலகி ஓடச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 114:3
உம்மைக் கண்டு யோர்தானை பின்னிட்டு திரும்பச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 144:3
மலைகளை ஆட்டுக்கடாக்களைப் போலவும் குன்றுகளை ஆட்டுக்குட்டிகளைப் போலவும் துள்ளச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 114:6
நன்றி ஆராதனை
**********************
கன்மலையைத் தண்ணீர்த்
தடாகமாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 114:8
கற்பாறையை நீரூற்றுகளாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 114:8
தொழுகை ஆராதனை
************************
பூமி அதிரச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 114:7
கடலை, யோர்தானை கீழ்படியச் செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 114:5
மலைகளை குன்றுகளை கீழ்படியச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 114:6
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக