1st September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 107:15-22
துதி ஆராதனை
*******************
வெண்கலக் கதவுகளை உடைக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 107:15
இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 107:15
மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறவர்களை இரட்சிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 107:18
நிர்மூடரை தங்கள் பாதகமார்க்கத்தால் ஒடுங்கிப் போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 107:17
நிர்மூடரை தங்கள் அக்கிரமங்களால் நோய்க்கொண்டு ஒடுங்கிப் போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 107:17
சகல போஜனத்தையும் அரோசிக்கிற ஆத்துமாவை ஓடுங்கிப்போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 107:18
தங்கள் ஆபத்திலே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களை இரட்சிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 107:19
அவர்களின் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 107:19
உம்முடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடு விவரிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 107:22
நன்றி ஆராதனை
*********************
தமது வசனத்தை அனுப்புகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 107:20
தமது வசனத்தை அனுப்பி அவர்களை குணமாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 107:20
தமது வசனத்தை அனுப்பி அவர்களை அழிவுக்கு தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 107:20
தொழுகை ஆராதனை
*************************
உம்முடைய கிருபையினிமித்தம் ஜனங்களால் துதிக்கப்படுகிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 107:16
உம்முடைய கிருபையினிமித்தம் உமக்கு ஸ்தோத்திரபலிகள் செலுத்தி தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 107:22
மனுபுத்திரருக்கு நீர் செய்கிற அதிசயங்களினிமித்தம் ஜனங்களால் துதிக்கப்படுகிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 107:16
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக