8th September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 110
துதி ஆராதனை
*******************
என் ஆண்டவரை நோக்கி 'நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கி போடும்வரைக்கும் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்ற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 110:1
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியாராயிருக்கிறீர் என்று ஆணையிட்ட கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 110:4
ஆணையிட்ட நீர் மனம் மாறாமலிருப்பதற்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 110:4
தேவனுடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 110:5
வழியிலே (மரண)நதியில் குடிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 110:7
தமது தலையை (உயிர்த்தெழுகின்ற ) எடுக்கின்ற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 110:7
ஜாதிகளுக்குள் நியாயந்தீர்க்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 110:6
எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 110:6
விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாயிருக்கிறவர்களை நொறுக்கிப்போடுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 110:7
நன்றி ஆராதனை
**********************
உமது ஜனங்களை மனப்பூர்வமாயிருக்கச் செய்கிற உமது பராக்கிரமத்தின் நாளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 110:3
உம்முடைய ஜனங்களை பரிசுத்த அலங்காரமுள்ளவர்களாகயிருக்கச் செய்கிற உம்முடைய பராக்கிரமத்தின் நாளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங்110:3
விடியற்காலத்து கர்ப்பத்தில் பிறக்கும் பணிக்குச் சமானமாய் பிறக்கிற உம்முடைய யௌவன ஜனத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 110:3
தொழுகை ஆராதனை
************************
சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புகிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 110:2
உமது சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்யும் தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 110:2
உமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை
வெட்டுகிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 110:5
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக