3rd September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 107:30-37
துதி ஆராதனை
********************
ஆறுகளை
அவாந்தரவெளியாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 107:33
நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 107:33
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 107:34
அவாந்தரவெளியைத் தண்ணீர்த் தடாகமாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 107:35
வறண்ட நிலத்தை நீரூற்றுக்களாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 107:35
ஜனங்களின் சபையிலே உயர்த்தப்படுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 107:32
தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 107:30
பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 107:36
அவர்கள் குடியிருக்கும் நகரத்தை கட்டச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 107:36
நன்றி ஆராதனை
**********************
வயல்களில் உண்டாக்கி விதைக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 107:37
திராட்சைத் தோட்டங்களை நாட்டுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 107:37
வயல்களை வரத்துள்ள பலனைத் தரச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 107:37
தொழுகை ஆராதனை
************************
உம்முடைய கிருபையினிமித்தம் ஜனங்களால் துதிக்கப்படுகிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 107:31
உம்முடைய கிருபையினிமித்தம் மூப்பர்களின் சங்கத்திலே போற்றப்படுகிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 107:32
மனுபுத்திரருக்கு நீர் செய்கிற அதிசயங்களினிமித்தம் ஜனங்களால் துதிக்கப்படுகிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 107:31
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக