புதன், 14 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை 14th September 2022

சத்திய ஆராதனை
14th September 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 113

துதி ஆராதனை 
********************
தம்முடைய ஊழியக்காரர்களால் துதிக்கப்படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 113:1 
உம்முடைய ஊழியக்காரர்களால் துதிக்கப்படுகிற உம்முடைய நாமத்திற்காக தேவனே உமக்கு கோடானகோடி அல்லேலூயா 
சங் 113:1 
இதுமுதல் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படுகிற உம்முடைய நாமத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 113:2

வானங்களுக்கு மேலான உம்முடைய மகிமைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 113:4 வானத்திலுமுள்ளவைகளை பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 113:6 பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 113:6

எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 113:4 
சிறியவனை பிரபுக்களோடு உட்காரப்பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 113:8 
எளியவனை தமது ஜனத்தின் அதிபதிகளோடு உட்காரப்பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 113:8

நன்றி ஆராதனை
*********************
சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 113:7 
எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 113:7 
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலேயே குடியிருக்க பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 113:9 

தொழுகை ஆராதனை
************************
உன்னதங்களில் வாசம்பண்ணுகிற தேவனாகிய கர்த்தாவே உம்மை தொழுது கொள்ளுகிறேன் 
சங் 113:5 
சூரியன் உதிக்கும் திசை தொடங்கி துதிக்கப்படுகிற உமது நாமத்திற்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 113:3 
சூரியன் அஸ்தமிக்கும் திசை மட்டும் துதிக்கப்படுகிற உமது நாமத்திற்காக தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 113:3
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக