வியாழன், 15 செப்டம்பர், 2022

இயேசுவின் ஊழியத்தில் காணப்பட்ட காரியங்கள்

_*கர்த்தர் இயேசுவின் ஊழியத்தில் காணப்பட்ட காரியங்கள்..*_
💢💢💢💢💢💢💢💢💢💢💢
_1) கர்த்தர் இயேசு தனது பிரசங்கத்தில் உலக ஆசீர்வாதங்களை எங்கும் (வீடு, கார், வேலை, நிலபுலன்களை) கூறவில்லை. (தேவனுடைய ராஜ்யத்தை தேடும் போது கூட கொடுக்கப்படும் என்றார்)_

_2) வெறுக்க வேண்டிய காரியங்களை போதித்தார் - மத் 16 : 24, லூக் 14 : 33_

_3) மற்றவர்களுடைய பாவத்தை கண்டித்து உணர்த்தினார் (விபச்சார ஸ்திரியின் பாவத்தை அவளுக்கு உணர்த்தினார்) - யோ 4 : 18_

_4) பரிசுத்தத்தை குறித்து பிரசங்கம் பண்ணினார் (மத் 7 : 1, 3 /12 : 36/6 : 23_

_5) உலகத்தில் பொக்கிஷம் சேர்க்க வேண்டாம், பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க சொன்னார் - மத் 6 : 19, லூக் 12 : 33_

_6) நியாயத்தீர்ப்பு, நித்திய மரணத்தைக் குறித்து போதித்தார் - மத் 7 : 19, 10 : 15_

_7) தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள் என்றார் - லூக் 12 : 31_

_8) பொருளாசை கூடாது என்றார் - லூக் 12 : 15 - 21_

_9) துர்உபதேசத்தைக் குறித்து போதித்தார் - மத் 6 : 11 - 12_

_10) வருகைக்கு ஆயத்தப்படும்படி போதித்தார் - லூக் 21 : 34_

_*11) கர்த்தர் இயேசு விசுவாசிகளை சபையில் டான்ஸ் ஆடும்படி எங்கும் கூறவில்லை.*_

_தேவ ஊழியர்களே உங்கள் பிரசங்கத்தில் மேலே கண்ட காரியங்கள் காணப்படுகிறதா ?_

_தேவ ஜனமே நீ செல்லும் சபையின் போதகர் மேற்கண்ட காரியங்களை போதிக்கிறாரா ?_

_ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்கிறவனானால் என்னைப் பின் பற்றக்கடவன் - யோ 12 : 26._

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக