திங்கள், 12 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை 12th September 2022

சத்திய ஆராதனை
12th September 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சாங் 112:1-6 

துதி ஆராதனை
*******************
கர்த்தருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமா இருக்கிற மனுஷனை பாக்கியவானாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 112:1 
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷனுடைய வீட்டில் ஆஸ்தி இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 112:3 
கர்த்தருக்குப் பயப்படும் மனுஷனின் வீட்டில் ஐஸ்வர்யம் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 112:3

செம்மையானவர்களிடத்தில் வெளிச்சம் உதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 112:4 
இரக்கமுள்ளவனிடத்தில் வெளிச்சம் உதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 112:4 
மனஉருக்கமுள்ளவனிடத்தில் வெளிச்சம் உதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 112:4

கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷனுடைய நீதியை என்றென்றைக்கும் நிற்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 112:3 
நீதியுள்ளவனிடத்தில் வெளிச்சம் உதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 112:4
நியாயமான மனுஷனை என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 112:6

நன்றி ஆராதனை 
**********************
கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷனை பாக்கியவானாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 112:1 
இரங்கி கடன் கொடுக்கிற மனுஷனை பாக்கியவானாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 112:5 
தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிறகிற மனுஷனை பாக்கியவானக செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 112:5

தொழுகை ஆராதனை
*************************
இருளில் வெளிச்சம் உதிக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 112:4 
கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷனுடைய சந்ததியை பலத்திருக்கச் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்  
சங் 112:2 
செம்மையானவர்களின் வம்சத்தை ஆசீர்வதிக்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 112:2
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக