1st October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:25-32
டாலெத்
*********
துதி ஆராதனை
*******************
உமது பிரமாணங்களை எனக்குப் போதித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:26
என் வழிகளை உமக்கு விவரித்துக் காட்டின போது எனக்குச் செவிகொடுத்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:26
உமது கற்பனைகளின் வழியாக என்னை ஒடச்செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:32
மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிற என் ஆத்துமாவை உயிர்ப்பிக்கின்ற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:25
சஞ்சலத்தால் கரைந்து போகிற என் ஆத்துமாவை உமது வசனத்தின்படி எடுத்து நிறுத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:28
உமது கற்பனைகளால் என் இருதயத்தை விசாலமாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 119:32
உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:27
நான் பற்றுதலாயிருக்கிற உமது சாட்சிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:31
எனக்கு முன்பாக நிறுத்துகிற உம்முடைய நியாயங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:30
நன்றி ஆராதனை
*********************
உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:25
உம்முடைய வேதத்தை எனக்கு அருள் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:28
என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாத தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:31
தொழுகை ஆராதனை
************************
உமது அதிசயங்களைத் தியானிக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:27
பொய்வழியை என்னை விட்டு விலக்கின தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:29
மெய்வழியை நான் தெரிந்துகொள்ளச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 119:30
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக