12th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:97-104
மேம்
******
துதி ஆராதனை
*******************
நான் கைக்கொண்டிருக்கிற உம்முடைய கட்டளைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:100
உமது கட்டளைகளால் என்னை உணர்வடையச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:104
உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:101
நான் பிரியமாயிருக்கிற உமது வேதத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:97
நாள் முழுவதும் என் தியானமாயிருக்கிற உம்முடைய வேதத்திற்க்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:97
என்றைக்கும் என்னுடனே இருக்கிற உம்முடைய கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:98
என் தியானமாயிருக்கிற உம்முடைய சாட்சிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:99
என் நாவுக்கு இனிமையானவைகளாயிருக்கிற உம்முடைய வார்த்தைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:93
என் வாய்க்கு தேனிலும் மதுரமாமிருக்கிற உம்முடைய வார்த்தைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:93
நன்றி ஆராதனை
**********************
சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிற உம்முடைய வசனத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:101
நீர் எனக்கு போதித்திருக்கிறபடியால் என்னை உம்முடைய நியாயங்களை விட்டு விலகாமலிருக்கச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:102
எல்லா பொய் வழிகளையும் வெறுக்கச் செய்கிற உமது கட்டளைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:104
தொழுகை ஆராதனை
************************
என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிற உம்முடைய கற்பனைகளுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:98
எனக்கு போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கச் உமது சாட்சிகளுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:99
முதியோர்களை பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கச் செய்கிற உம்முடைய கட்டளைகளுக்காக தேவனே உம்மை வணங்குகிறேன் சங்119:100
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக