வெள்ளி, 21 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை 21st October 2022

சத்திய ஆராதனை
21st  October  2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில்   உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119:161-168 

ஷீன்
******
துதி ஆராதனை
*******************
என் இருதயம் பயப்படுகிற உமது  வசனத்துக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:161
உமது கட்டளைகளைக்  காத்து நடக்கச்  செய்கிற தேவனே உனக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:168 
உமது சாட்சிகளை காத்து நடக்கச்  செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:168
நான் செய்கிற உம்முடைய கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:166 

உமது வார்த்தையின் பேரில் என்னை மகிழச்  செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:162 
நான் நேசிக்கிற உம்முடைய வேதத்திற்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:163 
நான் மிகவும் நேசிக்கிற உமது சாட்சிகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:167

உம்முடைய இரட்சிப்புக்கு என்னை காத்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 119:166 
எனக்கு முன்பாக இருக்கிற உமது வழிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:168 
என் ஆத்துமா காக்கிற உமது சாட்சிகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:167

நன்றி ஆராதனை
**********************
பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினாலும்  உமது வசனத்திற்கே பயப்படச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:161 
மிகுந்த கொள்ளையுடைமையைக்  கண்டுபிடிக்கிறவன் மகிழ்வது போல உமது வார்த்தையில் மகிழச்  செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:162 
பொய்யைப்பகைத்து அருவருக்கச்  செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:163 

தொழுகை ஆராதனை
************************
ஒருநாளில் ஏழுதரம் உமது நீதி நியாயங்களினிமித்தம் உம்மைத்  துதிக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 119:164 
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானத்தை உண்டாக்குகிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:165 
உமது வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு இடறல் இல்லாமலிருக்கச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங்  119:165
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக