செவ்வாய், 25 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை 25th October 2022

சத்திய ஆராதனை
25th October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 121 

துதி ஆராதனை
********************
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 121:1 
இதோ உறங்காமல் இஸ்ரவேலை காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 121:4 
இதோ தூங்காமல் இஸ்ரவேலை காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 121:4

என் வலதுபக்கத்தில் எனக்கு நிழலாயிருக்குற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 121:5
என் ஆத்துமாவைக் காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 121:7
இதோ உறங்காமல் என்னை காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 121:3

என் போக்கை இது முதற்கொண்டு என்றைக்கும் காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 121:8 
என் வரத்தை இது முதற்கொண்டு என்றைக்கும் காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 121:8
என்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 121:7

நன்றி ஆராதனை
**********************
என்னை காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 121:5
பகலிலே வெயிலால் என்னை சேதப்படுத்தாத கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 121:6 
இரவில் நிலவால் என்னை சேதப்படுத்தாத கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 121:6 

தொழுகை ஆராதனை
*************************
வானத்தை உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து வரும் ஒத்தாசைக்காக தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 121:2 
பூமியை உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து வரும் ஒத்தாசைக்காக தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 121:2 
என் காலைத் தள்ளாடவொட்டாத கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 121:3
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக