10th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:81-88
கப்
****
துதி ஆராதனை
*******************
உம்முடைய வாக்கின் சாட்சியை காத்து நடக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:88
நான் காத்திருக்கிற உம்முடைய வசனத்துக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:81
உமது பிரமாணங்களை மறவாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:83
என் ஆத்துமா தவிக்கிற உம்முடைய இரட்சிப்புக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:81
உம்முடைய கிருபையின்படி என்னை உயிர்ப்பிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:88
உண்மையாயிருக்கிற உம்முடைய கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:86
எப்பொழுதும் என்னை தேற்றுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:82
எனக்கு சகாயம் பண்ணுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:86
நான் விட்டுவிடாத உமது கட்டளைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:87
நன்றி ஆராதனை
**********************
உம்முடைய வாக்கின் மேல் நோக்கமாய் என் கண்களை பூத்துப் போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:82
என்னை பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிக்கச் செய்கிற உமது கட்டளைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:87
புகையிலுள்ள துருத்தியை போலானாலும் உமது பிரமாணங்களை மறவாமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:83
தொழுகை ஆராதனை
************************
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்கிற தேவனே உம்மைப் பணிந்து கொள்கிறேன்
சங் 119:84
அநியாயமாய் என்னை துன்பப்படுகிறவர்களினின்று எனக்கு சகாயம் பண்ணும் தேவனே உம்மைப் பணிந்து தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:86
உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் எனக்கு குழிகளை வெட்டின அகங்காரிகளுக்கு நியாயத்தீர்ப்புச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 119:85
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக