18th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:137-144
த்சாடே
********
துதி ஆராதனை
*******************
நீதிபரராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:137
மிகவும் புடமிடப்பட்ட உமது வார்த்தைக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:140
என்னை பிழைத்திருக்கச் செய்கிற உம்முடைய சாட்சிகளின் நீதிக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:144
உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சியாதலால் தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:143
உமது அடியேனாகிய நான் பிரியப்படுகிற உமது வார்த்தைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங்119:140
என்னை உணர்வுள்ளவனாக்குகிற உம்முடைய சாட்சிகளின் நீதிக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:144
நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியானவைகளாதலால் தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:138
நீர் கட்டளையிட்ட சாட்சிகள் மகா உண்மையு மானவைகளாதலால் தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:138
என்றைக்கும் நிற்கும் உமது சாட்சிகளின் நீதிக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:144
நன்றி ஆராதனை
*********************
என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால் என்னை பட்சிக்கிற என் பக்திவைராக்கியத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:139
நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருந்தாலும் நான் மறவாத உம்முடைய கட்டளைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:141
இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தாலும் என் மனமகிழ்ச்சியாயிருக்கிற உமது கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:143
தொழுகை ஆராதனை
************************* செம்மையானவைகளாகிய உம்முடைய நியாயத்தீர்ப்புகளூக்காக தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 119:137
உம்முடைய வேதம் சத்தியமாதலால் தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:142
உம்முடைய நீதி நித்திய நீதியாதலால் தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 119:142
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக