19th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:145-152
கோப்
*******
துதி ஆராதனை
*******************
என் ஜெபத்தை கேட்கிறவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:145
என் முழு இருதயத்தோடும் நான் கூப்பிடுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:145
நான் கைக்கொள்ளுகிற உம்முடைய பிரமாணங்களுகாக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:145
நான் காத்திருக்கிற உம்முடைய வசனத்துக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:147
என்ன இரட்சிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:146
உண்மையாயிருக்கிற உமது கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:151
நான் காத்துக்கொள்ளுகிற உம்முடைய சாட்சிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:146
உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேட்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:149
உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:149
நன்றி ஆராதனை
**********************
நான் நோக்கிக் கூப்பிடுகிற இரட்சிப்பின் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:146
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்ட மது வசனத்துக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:147
உமது வசனத்தைத் தியானிக்கும்படி குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்களை விழித்துக்கொள்ள செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:148
தொழுகை ஆராதனை
*************************
சமீபமாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:151
தீவினையைப் பின்பற்றுகிறவர்களை உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங்119:150
நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை நெடுநாளாய் அறிந்திருக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:152
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக