5th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:49-56
சாயீன்
********
துதி ஆராதனை
*******************
என்னை நம்பப்பண்ணின உமது வசனத்துக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:49
உமது கட்டளைகளை கைக்கொள்ளச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:56
எனக்கு கிடைத்த உமது கட்டளைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:56
உமது
அடியேனாகிய நான் நினைத்தருளுகிற வசனத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:49
இராக்காலத்தில் உமது நாமத்தை நினைக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:55
உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர் நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்ததால் தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:53
எனக்கு கீதங்களாகயிருக்கிற உம்முடைய பிரமானங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:54
நான் நினைக்கிற உமது நியாயத்தீர்ப்பகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:52
என்னை தேற்றுகிற உமது நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:52
நன்றி ஆராதனை
**********************
என்னை உயிர்ப்பித்த உம்முடைய வாக்குக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:50
என் சிறுமையில் எனக்கு ஆறுதலாக இருந்த உம்முடைய வாக்குக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:50
அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம் பண்ணியும் உமது வேதத்தை விட்டு விலகாமல் இருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:51
தொழுகை ஆராதனை
*************************
ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:52
பரதேசியாய் நான் தங்கும் வீட்டில் நீர் கொடுத்த பிரமானங்களுக்காக தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 119:54
இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து வேதத்தைக் கைக்கொள்ள செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:55
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக