வியாழன், 20 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை 20th October 2022

சத்திய ஆராதனை
20th October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119:153-160

ரேஷ்
******
துதி ஆராதனை 
*******************
மிகுதியாயிருக்கிற உம்முடைய இரக்கங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:156 
என்னை உயிர்ப்பிக்கிற உமது நியாயங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:156
நான் மறவாதிருக்கிற உம்முடைய வேதத்திற்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:153

உம்முடைய கிருபையின்படி என்னை உயிர்ப்பிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:159 
உம்முடைய வார்த்தையின்படி என்னை உயிர்ப்பிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:154
நான் நேசிக்கிற உம்முடைய கட்டளைகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:159 

என் உபத்திரவத்தைப் பார்த்து என்னை விடுவிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:153
எனக்காக வழக்காடி என்னை மீட்டுக் கொள்ளுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:154 
உம்முடைய சாட்சிகளை விட்டு என்னை விலகாதிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:157

நன்றி ஆராதனை
**********************
உமது வசனத்தை காத்துக்கொள்ள துரோகிகளை எனக்கு அருவருப்பாயிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:158
என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் அநேகராயிருந்தாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகாதிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:157 
என்னை விரோதிக்கிறவர்கள் அநேகராயிருந்தாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:157 

தொழுகை ஆராதனை
*************************
உமது பிரமாணங்களைத் தேடாத துன்மார்க்கருக்கு இரட்சிப்பை தூரமாயிருக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 119:155 
உம்முடைய வசனம் சமூலம் சத்தியமாதலால் தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:160 
உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியமாதலால் தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 119:160
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக