24th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 120
துதி ஆராதனை
*******************
சமாதானத்தை பகைக்கிறவர்களிடத்தில் குடியிருந்த என்னை தப்புவித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 120:6
சமாதானத்தை பகைக்கிறவர்களிடத்தில் குடியிருந்த என் ஆத்துமாவை தப்புவித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 120:6
நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறவர்களினின்று என்னை தப்புவித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 120:7
பொய் உதடுகளுக்கு என் ஆத்துமாவைத் தப்புவித்த கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 120:2
கபட நாவுக்கு என் ஆத்துமாவைத் தப்புவித்த கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 120:2
என்னை சமாதானத்தை நாடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 120:7
என் நெருக்கத்திலே நான் நோக்கின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 120:1
நான் நோக்கிக் கூப்பிடுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 120:1
எனக்கு செவி கொடுத்த கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 120:1
நன்றி ஆராதனை
**********************
பொய் உதடுகளுக்கு பலவானுடைய கூர்மையான அம்புகளைக் கிடைக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 120:4
பொய் உதடுகளுக்கு சூரைச்செடிகளை எரிக்கும் தழலைக் கிடைக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 120:4
மேசேக்கிலே சஞ்சரித்தது போதும் என்று என்னை தப்புவித்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 120:5
தொழுகை ஆராதனை
*************************
கேதாரின் கூடாரங்களண்டையில் குடியிருந்த என்னை தப்புவித்த தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 120:5
கபட நாவுக்கு கிடைக்கப் போகிற பலவானுடைய கூர்மையான அம்புகளுக்காக தேவனே உம்மைத் தொழுது கொள்ளுகிறேன்
சங் 120:3
கபட நாவுக்கு கிடைக்கப் போகிற சூரைச்செடிகளை எரிக்கும் தழலுக்காக தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 120:3
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக