செவ்வாய், 4 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை 4th October 2022

சத்திய ஆராதனை
4th October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119:41-48

வௌ
*******
துதி ஆராதனை 
*******************
நான் தியானிக்கிற உமது பிரமாணங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:48 
நான் ஆராய்கிற உமது கட்டளைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:45 
என்னை விசாலத்திலே நடத்துகிற உமது கட்டளைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:45

நான் மனமகிழ்ச்சியாயிருக்கிற உமது கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:47
உமது வாக்கின்படி எனக்கு வருகிற உமது தயவுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:41 
உமது வாக்கின்படி எனக்கு வருகிற உமது இரட்சிப்புக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:41

நான் எப்பொழுதும் காத்துக்கொள்ளுகிற உமது வேதத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:44 
நான் என்றைக்கும் காத்துக் கொள்கிற உமது வேதத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:44 
நான் பேசுகிற உமது காட்சிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:46

நன்றி ஆராதனை
*********************
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:47
சத்திய வசனத்தை முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:43 
நான் நம்பியிருக்கிற உம்முடைய வசனத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:42 
என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுகிற உமது வசனத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:42

தொழுகை ஆராதனை
************************
நான் பிரியப்பட்டு கையெடுக்கிற உமது கற்பனைகளுக்காக தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 119:48
நான் காத்திருக்கிற உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன் 
சங் 119:43
ராஜாக்களுக்கு முன்பாக வெட்கப்படாமல் பேசுகிற உமது சாட்சிகளுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 119:46
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக