வெள்ளி, 7 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை 6th October 2022

சத்திய ஆராதனை
6th October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119:57-64

கேத்
*****
துதி ஆராதனை 
*******************
உமது வாக்கின்படி எனக்கு இரங்குகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:58 
நான் கைக்கொள்ளும்படி இருக்கிற உமது கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:60 
நான் தாமதியாமல் கைக்கொள்ளும்படி தீவிரிக்கிற உமது கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:60

என் பங்குமாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:57 
முழு இருதயத்தோடு நான் கெஞ்சுகிற உம்முடைய தயவுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:58 
உமது வசனங்களை கைக்கொள்ளுவேன் என்று சொல்ல வைக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:57

என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:59 
உம்மை துதிக்கும்படி பாதி ராத்திரியில் எழுந்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 119:62 
உமது பிரமாணங்களை எனக்குப் போதித்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:64

நன்றி ஆராதனை 
**********************
உமக்கு பயப்படுகிற அனைவருக்கும் என்னைத் தோழனாக்கிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:63 
உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் என்னை தோழனாக்கிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:63 
என் வழிகளை உம்முடைய சாட்சிகளுக்கு நேராக சிந்திக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:59

தொழுகை ஆராதனை
*************************
உமது கிருபையினால் நிறைந்திருக்கிற பூமிக்காக தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 119:64 
உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 119:62
துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னை கொள்ளையிட்டும் உம்முடைய வேதத்தை மறக்கச் செய்யாமல் இருக்க செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 119:61
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக