வெள்ளி, 28 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை 28th October 2022

சத்திய ஆராதனை
28th October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 124 

துதி ஆராதனை
*******************
மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பின போது நமது பக்கத்தில் இருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 124:1
மனுஷர் கோபம் நம்மேல் எரிகையில் நமது பக்கத்தில் இருக்கும் கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 124:3
மனுஷர் நம்மை உயிரோடு விழுங்காமல் இருக்க நமது பக்கத்தில் இருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 124:3

கர்த்தராகிய நீர்தாமே நமக்கு பக்கத்தில் இருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 124:2 
தண்ணீர்கள் நம்மேல் பாயும் போது நமது பக்கத்தில் இருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 124:4 
நமது ஆத்துமாவின் மேல் வெள்ளங்கள் பெருகும்போது நமது பக்கத்தில் உள்ள கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 124:4

நம்மை மனுஷருடைய பற்களுக்கு இரையாக ஒப்புக் கொடாதிருக்கிற கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 124:6 
கொந்தளிக்கும் ஜலங்கள் நம்மேல் புரளாமல் இருக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 124:5 
நம்மை வேடனுடைய கண்ணிக்குத் தப்பச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 124:7

நன்றி ஆராதனை
*********************
வேடருடைய கண்ணிக்கு என் ஆத்துமாவை தப்பிக்க செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 124:7 
வேடருடைய கண்ணியைத் தெறிக்கச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 124:7 
வேடருடைய கண்ணிக்கு தப்பின குருவியைப்போல நம்மை தப்பிக்கச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 124:7

தொழுகை ஆராதனை
*************************
இஸ்ரவேல் சொல்வதுபோல் கொந்தளிக்கும் ஜலங்கள் நம் ஆத்துமாவின்மேல் புரண்டு போகாமலிருக்க செய்த தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 124:5
வானத்தை உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ள நம்முடைய சகாயத்திற்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன் 
சங் 124:8 
பூமியை உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ள நம்முடைய சகாயத்திற்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 124:8
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக