14th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:113-120
சாமெக்
*********
துதி ஆராதனை
*******************
நான் பயப்படுகிற உமது நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:120
என் மறைவிடமாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:114
நான் கைக்கொள்கிற உம்முடைய கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:115
என் கேடகமாமாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:114
வீண் சிந்தனைகளை வெறுத்து நான் பிரியப்படுகிற உம்முடைய வேதத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:113
உமது வசனத்திற்கு என்னை காத்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:114
என்னை ஆதரித்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:117
நான் பிரியப்படுகிற உமது சாட்சிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:119
நான் பிழைத்திருப்பதற்கு உம்முடைய வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:116
நான் இரட்சிக்கப்பட என்னை ஆதரிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:117
நன்றி ஆராதனை
**********************
என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாத தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:116
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது ஆதலால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:120
எக்காலமும் என்னை உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:117
தொழுகை ஆராதனை
***********************
பொல்லாதவர்களை என்னை விட்டு அகன்று போகச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 119:115
உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப்போடுகிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:118
பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:119
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக