சனி, 8 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை 8th October 2022

சத்திய ஆராதனை
8th October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119:73-80

யோட் 
*******
துதி ஆராதனை
********************
என்னை உண்டாக்கின உம்முடைய கரங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:73 
என்னை உருவாக்கின உம்முடைய கரங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:73 
என் இருதயத்தை உத்தமமாயிருக்கச் செய்கிற உமது பிரமாணங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:80

உமது அடியேனுக்கு நீர் கொடுத்த உமது வாக்கிற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:76 
உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:73
உம்முடைய வேதத்தை என் மனமகிழ்ச்சியாகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:77

என்னை தேற்றுகிற உம்முடைய கிருபைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:76 
உமக்குப் பயந்தவர்களை என்னண்டைக்கு திரும்பச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:79 
உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்களை என்னண்டைக்கு திரும்பச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:79

நன்றி ஆராதனை
**********************
நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கங்கள் எனக்கு கிடைப்பதால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:77 
உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்று அறியச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:75 
நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிற படியால் உமக்கு பயந்தவர்கள் என்னை கண்டு சந்தோஷப்படச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:74

தொழுகை ஆராதனை
*************************
நீதியுள்ள உமது நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 119:75
நான் வெட்கப்பட்டு போகாதபடிக்கு இருக்கிற உமது பிரமாணங்களுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்  
சங் 119:80 
உமது கட்டளைகளை தியானிப்பதால் என்னை பொய்களினால் கெடுக்கப் பார்க்கிற அகங்காரிகளை வெட்கப்பட்டுப் போகச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 119:78
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக