சனி, 22 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை 22nd October 2022

சத்திய ஆராதனை
22nd October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119:169-176

தௌ
+++++
துதி ஆராதனை
++++++++++++++
 நீதியுள்ளவைகளாகிய உமது கற்பனைகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா 
சங் 119:172
உம்முடைய வார்த்தையின்படி என்னை விடுவித்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:170 
உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:171 

உமது வசனத்தின்படி என்னை உணர்வுள்ளவனாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:169 
உம்முடைய இரட்சிப்பின் மேல் ஆவலாயிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:174 
என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 119:175

 நான் தெரிந்துகொண்ட உம்முடைய கட்டளைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:173
காணாமற்ப்போன ஆட்டைப் போல் வழிதப்பிப்போன உமது அடியேனைத் தேடுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:176
உமது கற்பனைகளை மறவாமல் இருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:176

நன்றி ஆராதனை
++++++++++++++++
உமது சந்நிதியில் வருகிற என் கூப்பிடுதலுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:169 
உமது சந்நிதியில் வருகிற விண்ணப்பத்திற்கு கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:170 
உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்துகிற என் உதடுகளுக்கு கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:171
உமது வசனத்தை விவரித்து சொல்லுகிற என் நாவுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:172

தொழுகை ஆராதனை
++++++++++++++++++
உமது கரம் எனக்கு துணையாக இருப்பதால் தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்  
சங் 119:173 
உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருப்பதால் தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 119:175 
உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சியாக இருப்பதால் தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 119:174
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக