திங்கள், 17 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை 17th October 2022

சத்திய ஆராதனை
17th October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119:129-136 

பே 
****
துதி ஆராதனை 
*******************
உம்முடைய கட்டளைகளை காத்துக்கொள்ள செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:134 
உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:133
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் எனக்கு வெளிச்சம் தருகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:130

என் ஆத்துமா கைகொள்ளுகிற உம்முடைய சாட்சிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:129
பேதைகளை உணர்வுள்ளவர்களாக்குகிற உம்முடைய வசனத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:130
நான் வாஞ்சிக்கிற உமது கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:13

உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால் என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடச்செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:136
உம்முடைய பிரமாணங்களை எனக்கு போதித்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:135

அதிசயமானவைகளாகிய உமது சாட்சிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:129

நன்றி ஆராதனை 
**********************
என் வாயை ஆவென்று திறந்து உம்முடைய கற்பனைகளுக்கு ஏங்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:131 
உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்துக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 191:32 
உமது நாமத்தை நேசிக்கிற என்னை நோக்கி பார்த்து எனக்கு இரங்குகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:132

தொழுகை ஆராதனை
*************************
மனுஷர் செய்யும் இடுக்கதுக்கு என்னை விலக்கி விடுவித்தருளுகிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:134
ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதிருக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 119:133 
உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப் பண்ணுகிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 119:135
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக