திங்கள், 3 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை 3rd October 2022

சத்திய ஆராதனை
3rd October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119:33-40

**
துதி ஆராதனை
+++++++++++++++
உமது பிரமாணங்களின் வழியை எனக்கு போதிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:33  
உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:35 
உம்முடைய கட்டளைகள் மேல் வாஞ்சையாயிருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 119:47

உமது வேதத்தை பற்றிக்கொண்டு என் முழு இருதயத்தோடும் அதை கைக்கொள்ளச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:34 
என் இருதயம் பொருளாசையை சாராமலிருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:36 
மாயையைப் பாராதபடி என் கண்களை விலக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 119:37

எனக்கு உணர்வைத் தருகிற உமது வேதத்துக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:34 
உமது சாட்சிகளை சாரும்படி செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:36 
நான் அஞ்சுகிற நிந்தையை என்னை விட்டு விலக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 119:39

நன்றி ஆராதனை
++++++++++++++++
உமது வழிகளில் என்னை உயிர்ப்பிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:37 
உமது நீதியால் என்னை உயிர்ப்பிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:40 
முடிவுபரியந்தம் உமது பிரமாணங்களின் வழியை காத்துக்கொள்ள செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 119:33 

தொழுகை ஆராதனை
++++++++++++++++++
நல்லவைகளாகிய உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்  
சங் 119:39
நான் பிரியமாயிருக்கிற உம்முடைய கற்பனைகளுக்காக தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 119:35 
உமக்குப் பயப்படுவதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்துகிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 119:38
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக