புதன், 26 அக்டோபர், 2022

சத்திய ஆராதனை26th October 2022

சத்திய ஆராதனை
26th October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 122 

துதி ஆராதனை 
*******************
எருசலேமில் இஸ்ரேலுக்குச் சாட்சியாக இருக்கிற கர்த்தருடைய ஜனங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 122:4
என் சகோதரர் நிமித்தம் எருசலேமில் சமாதானம் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 122:8 
என் சிநேகிதர் நிமித்தம் எருசலேமில் சமாதானம் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 122:8

எருசலேமில் வைக்கப்பட்டிருக்கிற தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 122:5 
எருசலேமின் அலங்கத்திற்குள்ளே சமாதானம் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 122:7
எருசலேமின் அரமனைகளுக்குள்ளே சுகம் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 122:7

எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்ற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 122:6 
எருசலேமை நேசிக்கிறவர்கள் சுகித்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 122:6 
உமது நாமத்தை ஸ்தோத்திரிக்கப் போகிற
கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 122:4

நன்றி ஆராதனை 
**********************
எனக்கு நன்மை உண்டாக நான் தேடுகிற எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 122:9 
கர்த்தருடைய ஆலயத்துக்கு போவோம் வாருங்கள் என்று அவர்கள் சொன்னதால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 122:1 
கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் என்று சொன்னபோது மகிழ்ச்சியாய் இருந்ததால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 122:1

தொழுகை ஆராதனை
*************************
எங்கள் கால்கள் நிற்கிற எருசலேமில் வாசல்களுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன் 
சங் 122:2 
இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிற எருசலேமுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 122:3 
நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிற எருசலேமுக்காக தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 122:5
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக