15th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:121-128
ஆயின்
+++++++
துதி ஆராதனை
+++++++++++++++
உமது பிரமாணங்களை எனக்குப் போதித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:124
சகல பொய்வழிகளையும் வெறுக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:128
உமது நீதியின் வார்த்தைக்கு என்னை காத்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:123
உமது இரட்சிப்புக்கு என்னை காத்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:123
பொன்னிலும் அதிகமாய் நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:127
பசும்பொன்னிலும் அதிகமாய் நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:127
உமது அடியேனுக்கு நன்மையாகத் துணை நிற்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:122
உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:125
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:128
நன்றி ஆராதனை
++++++++++++++++
நான் உமது அடியேனாதலால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:125
நியாயம் செய்கிற எனக்கு துணை நிற்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:121
நீதி செய்கிற எனக்கு துணை நிற்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:121
என் கண்களைப் பூத்துப்போகச் செய்கிற உமது இரட்சிப்புக்காக உமது நீதிக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:123
தொழுகை ஆராதனை
+++++++++++++++++++
என்னை ஒழுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாத தேவனே உம்மைப் பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:121
அகங்காரிகள் என்னை ஒடுக்க வொட்டாதிருக்கச் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:122
நீதியைச் செய்ய உமக்கு வந்த வேளைக்காக தேவனே உம்மை சேவிக்கிறேன்
சங் 119:126
உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினவர்களுக்கு நீதியைச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 119:126
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக