11th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:89-96
லாமேட்
*********
துதி ஆராதனை *******************
தலைமுறை தலைமுறையாக இருக்கும் உம்முடைய உண்மைக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங்119:90
பூமியை உறுதிப்படுத்தின தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங்119:90
பூமியை நிலைத்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:90
என் மனமகிழ்ச்சியாயிருக்கிற உம்முடைய வேதத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:92
என்ன இரட்சிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:94
என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிற உமது வசனத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:89
உமது சாட்சிகளை சிந்தித்துக் கொண்டிருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 119:95
உம்முடைய கட்டளைகளை ஆராயச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:94
உம்முடைய கட்டளைகளை ஒருபோதும் மறக்காமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:93
நன்றி ஆராதனை
**********************
நான் உம்முடையவனாயிருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங்119:90
என்னை துக்கத்திலே அழிந்துப் போகாமலிருக்கச் செய்கிற உம்முடைய வேதத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:92
உம்முடைய கட்டளைகளால் என்னை உயிர்ப்பித்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:93
தொழுகை ஆராதனை
************************
சமஸ்தமும் உம்மை சேவிப்பதால் தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:91
சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டாலும் உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரமாயிருக்கிறபடியால் தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:96
உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி இந்நாள்வரைக்கும் நிற்கிற வானங்களுக்கும் பூமிக்காக தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 119:91
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக