29th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 125
துதி ஆராதனை
*******************
கர்த்தரை நம்புகிறவர்களை என்றென்றைக்கும் அசையாமல் இருக்கும் சீயோன் பர்வதத்தைப் போலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 125:1
கர்த்தரை நம்புகிறவர்களை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 125:1
என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 125:2
பர்வதங்கள் எருசலேமைச் சுற்றி இருக்குமாப்போல் இதுமுதல் ஜனத்தை சுற்றிலும் இருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 125:2
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 125:3
ஆகாயத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 125:3
நன்றி ஆராதனை
**********************
நல்லவர்களுக்கு நன்மை செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 125:4
இருதயத்தில் செம்மையானவர்களுக்கு நன்மை செய்யும் கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 125:4
தொழுகை ஆராதனை
************************
தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களை அக்கிரமக்காரரோடு போகப் பண்ணுகிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 125:5
இஸ்ரவேலுக்கோ சமாதானத்தை உண்டு பண்ணுகிற கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 125:5
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக