1st November 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 127
துதி ஆராதனை
*******************
கர்த்தரால் வரும் சுதந்திரமாகிய பிள்ளைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 127:4
கர்த்தரால் கிடைக்கும் பலனாகிய கர்ப்பத்தின் கனிக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 127:4
தமக்கு பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி
ஓசன்னா
சங் 127:3
வாலவயதின் குமாரரை பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 127:5
வாலவயதின் குமாரரால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷனை பாக்கியவானாகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 127:6
வாலவயதின் குமாரரை உடையவன் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடு பேசச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 127:6
நன்றி ஆராதனை
*********************
நாங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையில் தரித்திருக்கிறது விருதா என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 127:3
நேரப்பட வேலையில் தரித்து வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 127:3
தொழுகை ஆராதனை
*************************
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா என்று உணர்த்துகிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 127:1
கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா என்று உணர்த்துகிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 127:2
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக