வெள்ளி, 25 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 25th Novmber 2022

சத்திய ஆராதனை
25th Novmber 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139:19-24 

துதி ஆராதனை 
********************
என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 139:23 
என்னை சோதித்து அறிந்து கொள்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 139:23

என் இருதயத்தை அறிந்து கொள்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 139:23 
என் சிந்தனைகளை அறிந்து கொள்ளுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 139:23

வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்க்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 139:24 
நித்திய வழியில் என்னை நடத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 139:24

நன்றி ஆராதனை 
**********************
இரத்தப்பிரியர்களை என்னை விட்டு அகன்று போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 139:19 
உம்மைப் பகைக்கிறவர்களை நானும் பகைக்கச்செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 139:21 
உமக்கு விரோதமாய் எழுந்துகிறவர்களை அருவருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 139:21

தொழுகை ஆராதனை
************************
துன்மார்க்கனை அழிக்கின்ற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 139:19 
 உம்மைக் குறித்து துன்மார்க்கமாய் பேசுகிறவர்களை அழிக்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 139:20
உமது நாமத்தை வீணாய் வழங்குகிற உம்முடைய சத்துருக்களை அழிக்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 139:20
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக